
உகண்டாவில் திருமணமான இரண்டு வாரத்தில் தனது மனைவி ஒரு ஆண் என்பதை அறிந்து புதுமாப்பிள்ளை அதிர்ச்சியடைந்தார்.
இஸ்லாமிய குருவான முகமது முடும்பா என்பவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் முகமது வீட்டில் இருந்து துணிகள், பணம் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை திருடியதாக புதுப்பெண் சுவபுல்லா கைது செய்யப்பட்டார்.
அவர் முகத்தில் பர்தாவும், பெண்கள் அணியும் செருப்பும் அணிந்திருந்த போதும் பெண் காவலருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சுவபுல்லா பெண்ணே இல்லை என்பதும் அவர் ஆண் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவரின் உண்மையான பெயர் ரிச்சர்ட் (27) என்பது உறுதியானது. இது குறித்து பொலிசார் முகமதுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
பொலிசார் விசாரணையில் முகமது வீட்டில் திருடுவதற்காகவே ரிச்சர்ட் பெண் வேடமிட்டது தெரியவந்தது.
மேலும் ரிச்சர்டின் அத்தை தான் இந்த திருமணத்தை நடத்தி வைத்து ரிச்சர்டுக்கு திருடும் திட்டத்தை போட்டு கொடுத்ததும் உறுதியானது.
இதை தொடர்ந்து பொலிசார் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply