தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று காலை குறித்த சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியிலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *