
பிரபல நடிகர் Jayalath Manorathne உயிரிழந்த நிலையில் அவரின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த பிரபல நடிகர் Jayalath Manorathne மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி Jayalath தனது 71வது வயதில் காலமானார்.
அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா டுவிட்டரில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், மிக சிறந்த கலைஞரான திரு Jayalath Manorathne-வின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவர் ஆன்மா சாந்தியடையட்டும். Jayalath-ன் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.
Leave a Reply