
ரஜினியின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று சந்திரமுகி. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி 2005ம் ஆண்டு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியாகி இருந்தது.
படம் 200 நாளை தாண்டி வசூல் சாதனை செய்தது. அதேநாளில் தான் விஜய்யின் சச்சின் படமும் வெளியானது. சச்சின் படம் அவ்வளவாக வெற்றிபெறவில்லை என்ற பேச்சு இருந்துகொண்டு தான் இருக்கிறது.
அண்மையில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தாணு இதுகுறித்து பேசியுள்ளார். சந்திரமுகி படம் 200 நாளை தாண்டி பூகம், புயல் போல் வசூல் சாதனை செய்து வந்தது. அதோடு விஜய்யின் சச்சின் தென்றல் போல் தவழ்ந்து வந்தது, இந்த படமும் 200 நாள் ஓடியது.
நிறுத்தலாம் என்று கடைசி நாளின் போதும் படம் 1000 ரூபாய் ஷேர் கிடைத்தது.
தயாரித்த எனக்கும், வாங்கியவர்களுக்கு படம் நல்ல லாபத்தை கொடுத்தது என பேசியுள்ளார்.
சந்திரமுகியுடன் சேர்ந்து வெளியானாலும் சச்சின் வெற்றிப்படம் தானாம்.
Leave a Reply