
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிடியாணை – சட்டமா அதிபர் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதன்மூலம் அரசியலமைப்பின் பிரிவு 111 சி (2) இன் பிரகாரம் அவர் குற்றவாளி என்பதனாலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Leave a Reply