
வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாநகர சபை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என யாழ்ப்பாண வணிகர் சங்கத்தின் தலைவர் ஜன குமார் கவலை வெளியிட்டுள்ளார்
2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்கு பின்னர் யாழ்ப்பான நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்கு கீழ் உள்ள நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறைபாடுகள் தொடர்பாக எந்த ஒரு விடயமும் தீர்க்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பல்வேறுதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தமக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வினைக்காண யாழ்ப்பாண மாநகரசபை முன்வரவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
Leave a Reply