
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதற்கமைய கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கொழும்பு பிரதம நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த பிணை உத்தரவில் குறைபாடு உள்ளதாகவும் எனவே அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள் திருத்த விண்ணப்பத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த மனுவின் எதிர்மனுதாரர்களுள் ஒருவரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை குறித்த தினத்தில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply