
உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச பகிர்ந்துள்ளார்.
இன்றைய தினம் உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது டுவிட்ட தளத்தில் பிரதமர் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
உங்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். எமது தேசம் சகல வளங்களும் கொண்டதாகும்.
எமது தேசத்தில் முன்னேற்றம், அபிவிருத்தி என எல்லாவற்றிலும் அனைத்து மக்களும் ஒன்றாக முயற்சி செய்தால் அனைவரும் நன்மை அடையலாம்.
தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம் மற்றும் சௌபாக்கியம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply