மேகனுக்கு மற்றொரு சிக்கல்: மகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் தந்தை!

பிரித்தானிய இளவரசர் ஹரியை கடும் சிக்கலுக்குள்ளாக்கி, மகாராணியாரை அவமதித்ததாக, மேகன் மீது பிரித்தானியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அவருக்கு மற்றொரு சிக்கல் உருவாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம், தான் தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றை பத்திரிகை ஒன்று வெளியிட்டதற்காக, அதன் மீது வழக்கு தொடர்ந்தார் பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன்.

இதற்கிடையில், அவரும் இளவரசர் ஹரியும் மகன் ஆர்ச்சியுடன் ராஜ பதவியைத் துறந்து வெளிநாடு ஒன்றிற்கு சென்று சாதாரண மக்களைப்போல வாழ விரும்புவதாக வெளியிட்ட தகவல் ராஜ குடும்பத்தில் மட்டுமின்றி, பிரித்தானிய மக்களிடையேயும் கடும் குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

ஒரு பக்கம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மேகன் அழைக்கப்படாததோடு, தொலைபேசியில் அழைக்கவும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டதாக தகவல் வெளியாக, தான் தடை செய்யப்படவில்லை, கூட்டத்தின் நடுவில் தொலைபேசி அழைப்பு தேவையில்லை என்று தாங்கள்தான் முடிவு செய்ததாக மறுப்பு தெரிவிக்க, மேகனின் பெயர் செய்திகளில் எதிர்மறையாக வெளிவரலாயிற்று.

தற்போது, இது போதாதென்று, மற்றொரு சிக்கல் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம், தான் தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றை பத்திரிகை ஒன்று வெளியிட்டதற்காக, மேகன் அதன் மீது வழக்கு தொடர, அந்த வழக்கில், அவரது தந்தையே அவருக்கு எதிராக சாட்சியமளிக்க இருக்கிறார்.

மேகனின் தந்தை தாமஸ் மெர்க்கல் (75), பிரித்தானிய இளவரசர் ஹரியை தன் மகள் மேகன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நேரத்தில், தந்தைக்கும் மகளுக்கும் இடையே உறவுகள் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்திய குறுஞ்செய்திகளை தனது வழக்கறிஞர்களிடம் கையளித்துள்ளார்.

இந்த செய்திகள் இதற்கு முன் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படாத செய்திகள்.

அவற்றில், ஒரு செய்தியில், தனக்கு அவசரமாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் தன்னால் மகளின் திருமணத்துக்கு வர இயலாது என்று கூறியிருந்தார் தாமஸ்.

அதற்கு பதிலளிக்கும் விதத்தில், ஹரியிடமிருந்து அனுப்பப்பட்டது போல் தோன்றிய ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதைப் பார்த்த தாமஸ் வியப்படைந்துள்ளார், காரணம், அதில் தாமஸ் எப்படி இருக்கிறார், அவர் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூட இல்லை!

அதற்கு பதில், தாமஸ் மேகனை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தது அந்த குறுஞ்செய்தி.

அதைக் கண்ட தாமஸ்க்கு கடும் மன நோவு ஏற்பட்டது.

நான் உங்களையோ, மேகனையோ, வேறு யாரையும் காயப்படுத்தும் செயல் எதையும் நான் செய்யவில்லை…

எனது மாரடைப்பு உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று அந்த செய்திக்கு பதிலளித்துள்ளார் தாமஸ்.

ஏற்கனவே சிக்கலிலிருக்கும் மேகனுக்கு, தற்போது இந்த வழக்கில் அவரது தந்தையே அவருக்கு எதிராக சாட்சியமளிக்க இருப்பது, மேலும் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *