
அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் குறித்து கண்டுபிடிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சகல பேருந்துகளையும் பரிசீலிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அதிக ஒலி எழுப்பும் வகையில் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பேருந்துகள் குறித்து முறையிடுவதற்கு 1955 என்ற அவசர இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பேருந்துகளில் சத்தமாக இசை மற்றும் காணொளிகளை ஒலி, ஒளிபரப்பும் நடத்துனர்களுக்கு எதிராக முறையிட முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு, அனைத்து பேருந்துகளிலும் ஒலிப்பரப்புவதற்கு ஏற்ற வகையில் ஆயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பினை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிமுகம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply