
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
வெலிக்கட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (வியாழக்கிழமை) சிறைச்சாலையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்பு இன்று திசைத்திருப்பப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எதனை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றது என்பதையும் மக்கள் தற்போது நன்கு உணர்ந்திருப்பார்கள்.
கடந்த அரசாங்கத்தில் வெறுக்கப்பட்ட பல விடயங்களை இன்று ஆளும் தரப்பினர் விரும்புகின்றார்கள்.
இதேவேளை உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை தங்களது அரசியல் தேவைக்காக அரசாங்கம் பயன்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply