இந்தியா – சீனா முறுகல் நிலை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்!

இந்திய – சீனா முறுகல் நிலை என்பது உறவு நிலையில் தான் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேச மாநாடான ரைசினா டயலொக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் அவரிடம் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ. உள்ளிட்டு விவகாரங்கள் தொடர்பில், உலக நாடுகள் பல இந்தியா மீது வைக்கும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இதே விவகாரங்கள் மற்ற நாடுகளில் எழுந்த போது அவர்கள் எப்படி கையாண்டார்கள்? எப்படி வினையாற்றினார்கள், அவர்கள் பதில் சொல்லட்டும். நம் அண்டை நாட்டு தொந்தரவுகள் குறித்து நாம் மட்டும்தான் இப்படி வினையாற்றுகிறோமா என்ன? ஐரோப்பாவில் இதே சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன, அமெரிக்காவில் 9\11 பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தது. இதற்கெல்லாம் அவர்கள் எப்படி வினையாற்றினார்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த விவகாரத்தை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் என்பதுதான் என் பதில். விமர்சகர்கள் எப்போதும் புள்ளிகளில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டைப் பார்க்க வேண்டும்.

இந்தியா-சீனா உறவுகள் குறித்து சேர்ந்துதான் நாம் பயணிக்க வேண்டும். சவால் என்பது உறவுகள் தரப்பில்தான், உலகப் பொருளாதாரத்தில் நம்பர் 2 மற்றும் 3 என்ற இடத்தில் உள்ள நாடுகள், அண்டை நாடுகள் நிலையான உறவுகளுக்குள் செல்லும் என்பதில் ஐயமில்லை” என உறுதியளித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *