
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பிரச்சினை தொடர்பாக இறுதி முடிவு செய்யப்படவுள்ளது.
அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தின்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பிரச்சினை தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் இன்று முடிவு எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது ரணில் விக்ரமசிங்க ஒரு தலைமைக் குழுவை முன்மொழிந்து ஆராய்வதற்கும் சஜித் பிரேமதாச வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இருப்பினும் இறுதியில் வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் ஆகவே இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் மாற்றம் நிகழாது என ரணில் தரப்பு உறுதியாக தெரிவித்து வருகிறது.
ரணில் தரப்பை சேர்ந்த வஜிர அபேவர்த்தன தெரிவித்தபோது, ‘இன்று முக்கிய மாற்றங்கள் எதுவும் நிகழாது. ஐ.தே.க.வின் யாப்பின்படி, தலைமைத்துவத்தை மாற்ற நாடாளுமன்ற குழுவிற்கு அதிகாரமில்லை. தேசிய மாநாட்டில் மட்டுமே முடிவு செய்யலாம் என தெரிவித்தார்.
எனினும் இன்று சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால் தனி வழி செல்வதாக தீர்வு என சஜித் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply