
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன.
அந்தவகையில் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேர்ப்பு முறை மற்றும் அதற்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளன.
குறைந்த வருமானம் பெரும் சமூர்த்தி உதவி பெறும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தகுதி பெற்றிருந்தும் சமூர்த்தி உதவி கிடைக்காத குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை கட்டியெழுப்புவது இந்த பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் நோக்கமாகும்.
அத்தகைய குடும்பங்களில் தொழிற் படையணிக்கு பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் 6 மாத கால பயிற்சியின் பின்னர் நிலையான தொழில் வாய்ப்பு வழங்கப்படும்.
எவ்வித கல்வித் தகைமைகளையும் கொண்டிராத அல்லது குறைந்த கல்வி மட்டத்தில் உள்ள பயிற்றப்படாதவர்கள் இதற்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
மேலும் அவர்கள் வதியும் பிரதேசங்களிலேயே தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a Reply