
கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் காணி உரிமையாளர், கனரக வாகதனத்தைக் கொண்டு தனது காணியினை துப்பரவு செய்துகொண்டிருந்தபோது இவ்வாறு வெடிபொருட்களை அவதானித்துள்ளார்.
இதுதொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த காணி உரிமையாளர், அதனை பாதுகாப்பாக அகற்றுமாறு கோரியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கிளிநொச்சி நீதிமன்றின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினரின் உதவியோடு அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.




Leave a Reply