
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தீர்மானம் எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகத்தின் இயக்குனர் பதவி, பிரபல பாடகர் இராஜ் வீரரத்னவுக்கு வழங்கியமை தொடர்பில் பல்வேறு தரப்பினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இராஜின் நண்பர்களான பேஷல் மனோஜ் உட்பட குழுவினர் இராஜிற்கு ஆதரவாக பேஸ்புக் பிரச்சார நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் அவரின் சமூக வலைத்தள பிரச்சார நடவடிக்கை இந்த குழுவினராலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் கடந்த அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வர்த்தக நடவடிக்கை நிகழ்வுகளை ஏற்பாடு செய்த இராஜின் சகோதரியான அனுஷிகா ரிக்ஷி வீரரத்ன தொடர்பில், நிதி குற்ற விசாரணை பிரிவு நடவடிக்கை மேற்கொண்டது.
இவ்வாறான நிலையில் இராஜிற்கு பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a Reply