
நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தை தொடர்ந்து பாலமேட்டிலும் கோலாகலாமாக ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை எட்டுமணிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடைபெறுகிறது.
முதலில் போட்டியை நடத்தும் கிராம பொதுமகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி சார்பில் கோவில் காளை களம் இறக்கப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.
இதனையடுத்து போட்டியில் பங்கேற்பதற்கு பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக களமிறக்கப்படவுள்ளன. குறித்த காளைகளை அடக்குவதற்கு 936 வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீரர்கள் உறுதி மொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலை கடந்து சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க 75 வீரர்கள் களத்தில் உள்ளனர்.
Leave a Reply