
எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் தெரிவுக் குழுக்களுக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான காலஎல்லை நிறைவடையவுள்ளது.
இன்றுடன்(வியாழக்கிழமை) இந்த காலஎல்லை நிறைவடையவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வர்த்தகக் குழு, நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சலுகைகளுக்கான குழு, சட்டத்துறை நிலையியற்குழு, பொதுக்கணக்காய்வுக் குழு உள்ளிட்ட பல்வேறு தெரிவுக்குழுக்களுக்கான உறுப்பினர்களை பரிந்துரை செய்யுமாறு கோரப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply