
தமிழ்நாட்டின் கீழக்கரையில் தங்கி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இலங்கை நபரை சிறையில் அடைக்க உத்தரடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 36 வயதான முகமது ரிபாஸ் கடந்த 2004ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வேலை நிமித்தமாக டுபாய் சென்று , அங்கிருந்து 2009ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை சென்று புடவை கடையொன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் , கீழக்கரை சேர்ந்த பெண்ணொருவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து கீழக்கரையில் குடும்பத்துடன் வசித்து வந்தமுகமது ரிபாஸைகடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறையில் இருந்து வெளிவந்த ரிபாஸ் கடந்த 2019 ஏப்ரலில் இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாம் அல்லாதோருக்கு எதிராகவும் பிரசாரம் செய்வதுடன், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாத ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது.
இந்நிலையில் அவர் தனது உறுதிமொழி ஆவணத்தை மறைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு மூலம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றார்.
இது குறித்து காஞ்சிரங்குடி வி.ஏ.ஓ., கீழக்கரை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் , நன்னடத்தை பிணைய காலமான 2022 நவம்பர் 19 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Leave a Reply