
வவுனியா பிரதேச செயலாளராக ந. கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பிரதேச செயலாளராக கடமையாற்றிய கா.உதயராசா காணி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஊழலற்ற மக்கள் அமைப்பு முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வெற்றிடமாக காணப்பட்ட வவுனியா பிரதேச செயலகத்திற்கு வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய ந.கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று(வியாழக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ள ந.கமலதாசன் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply