
முதல் ஒருநாள் போட்டியின் போது பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் காயமடைந்த ரிஷப் பண்ட், 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரியேட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியானது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்றைக்கு முன்தினம் மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷப் பண்ட், 33 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அப்போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட் தலையில் பலமாக தாக்கியது.

இதில் காயமடைந்த அவர் போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கீப்பிங் செய்தார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியானது ராஜ்கோட் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ராஜ்கோட் சென்றுள்ளது. ஆனால் மூளையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவர் இரண்டாவது போட்டியில் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Leave a Reply