10 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு அதிரடி இடமாற்றம்

இலங்கையின் 10 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருக்கிறது.  ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரிகளை மாற்றும் படலமும்  மிக வேகமாக இடம்பெறும் நிலையில் விரைவில் 10 மாவட்டங்களுற்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்படவுள்ள 10  மாவட்டச் செயலாளர்களில் வடக்கு கிழக்குப் பகுதியில் மட்டும் 4  மாவட்டச் செயலாளர்களும்  மொனராகலை , புத்தளம் , அம்பாந்தோட்டை  ஆகிய மாவட்டத்துடன் கொழும்பு மாவட்டமும் காணப்படுகின்றது.

இவ்வாறு காணப்படும் 10  மாவட்டங்களிற்கான புதிய மாவட்டச் செயலாளர்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு  அமலேந்திரன் ,  கிளிநொச்சி மாவட்டத்திற்கு றூபவதி கேதீஸ்வரனும், வவுனியா மாவட்டத்திற்கு  அலங்க  மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  கலாவதியும் நியமிப்பதற்கான அனுமதி காணப்படுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *