
நடிகை மீனா தற்போது ரஜினிகாந்துடன் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் படங்களில் அவர் மீண்டும் நடிக்கத்தொடங்கியுள்ளார்.
அவருடன் ஜோடியாக 80, 90 களில் ஜோடியாக நடித்தவர் நடிகர் ராஜ் கிரண். என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரு படங்களில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மனிதர். திறமையான நடிகர்களுள் ஒருவரான இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு காலகட்டத்தில் கலக்கியவர்.
மண் மனம் மாறாத கிராமத்து கதை சார்ந்த அவரின் படங்கள் இன்னும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு அவர் தனுஷின் பவர் பாண்டி படம் மூலம் சினிமாவுக்கு வந்தார்.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி, ராஜ்கிரண் இருவரும் இணைந்து ஷைலாக் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழிலும் இப்படம் குபேரன் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதில் நடிகை மீனாவும் நடித்துள்ளார். அஜய் வாசு தேவ் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
Leave a Reply