கைத்துப்பாக்கி விவகாரம்: மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி ரஞ்சனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே, அவரை நீதிமன்றத்தில் இன்று பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *