மன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்கள் கௌரவிப்பு

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழாவும், உழவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது காலை 7 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு அகிய 5 பிரதேச செயலாளர் பிரிவகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 12 உழவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் கௌரவிப்பு நிகழ்வைத் தொடர்ந்து உழவர் விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *