
வெளிநாட்டில் குடும்பத்துக்காக சம்பாதிக்க வேலைக்கு சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின்ராமநாதபுரம் மாவட்டத்தின் வென்னீர்வாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (46).
இவரது மனைவி வனிதா (38). இவர்களுக்கு சவுமியா (17), தேசிகா (13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்தபோது கடந்த 15ம் திகதி மாரடைப்பால் இறந்து விட்டதாக உடன் வேலை செய்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியின் குடும்பத்தினர் கதறி அழுததுடன், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளனர்.
வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த பாண்டி இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply