
தமிழகத்தின் அரியூரை சேர்ந்தவர் பாஸ்கர், கடந்த 13ம் திகதி சின்னபாபு சமுத்திரதிலுள்ள உறவினர் வீட்டுக்கு தன்னுடைய 3 வயது குழந்தை கோபினியுடன் சென்றுள்ளார்.
அன்றைய தினம் அப்பகுதி சேர்ந்தவர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக குழி தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பாஸ்கரின் உறவினர் வீட்டிலும் 1 அடி சுற்றளவு மற்றும் 7 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது, பணியாளர்கள் வேறொரு வேலையாக சென்றுவிட அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கோபினி குழிக்குள் விழுந்துவிட்டது.
குழந்தையின் அலறல் சத்தம்கேட்டு அனைவரும் ஓடிவர, குழிக்குள் கையை விட்டு குழந்தையை தூக்க முயற்சித்தும் பலனில்லாமல் போனது.
இதனையடுத்து ஜேசிபி உதவியுடன் அருகிலேயே மற்றொரு குழி தோண்டப்பட்டு குறுக்குவாட்டில் குழந்தையை மீட்டனர்.
உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது, இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதறவைக்கின்றன.

Leave a Reply