இராஜாங்க அமைச்சரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவைக் கைது செய்து, நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிபதி பிரியந்த லியனகே பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவருக்கு எதிரான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது அவர் முன்னிலையாவதற்கு தவறியதன் காரணமாகவே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சகோதரியான துசாரா விக்ரமநாயக்கவுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவே  விதுரவுக்கு எதிராக  வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *