
எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் இலங்கையுடன் இணைந்து செயற்பட ரஷ்யாவும் சீனாவும் இணங்கியுள்ளன.
இந்த மாநாட்டில் இலங்கை சம்பந்தமான ஜெனிவா யோசனை முன்வைக்கப்படாவிட்டாலும், இலங்கை சித்திரவதைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி சமர்பிக்க உள்ளார்.
இதனை தவிர அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கானியா பிரான்சிஸ், குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, திணைக்களத்தின் முன்னர் பணிப்பாளர் ஷானி அபேசேகர பணி இடைநீக்கம் செய்யப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக மனித உரிமை பேரவையில் உரையாற்றி தகவல்களை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை மனித உரிமை பேரவையின் செயற்பாடுகளில் இருந்து இம்முறை பிரித்தானியா விலகிக் கொண்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் சம்பந்தப்பட்ட 17 அமைப்புகள் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக விடயங்களை முன்வைக்க உள்ளதாக தெரியவருகிறது.
Leave a Reply