
ஜனாதிபதியை விமர்சித்த ஒலிப்பதிவு வெளியானதைத் தொடர்ந்து, பதவி விலகிய உக்ரைன் பிரதமர் ஒலெக்ஷி ஹொன்ச்சாருக், வெளியான ஒலிப்பதிவு செயற்கையாக உருவாக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் ஒலெக்ஷி ஹொன்ச்சாருக், அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கியிடம் தனது இராஜினாமா கடிதத்தினை நேற்று (வெள்ளிக்கிழமை) கையளித்தார்.
பதவி விலகலை தொடர்ந்து, அதுகுறித்து ஒலெக்ஸி தனது முகப்புத்தகத்தில் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
‘ஜனாதிபதி மீதான எங்கள் மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகத்தை நீக்க, இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கி இருக்கிறேன். வெளியான ஒலிப்பதிவு செயற்கையாக உருவாக்கப்பட்டது. அதில் உண்மை இல்லை’ என கூறினார்.
இவ்வாரம் வெளியான அந்த சர்ச்சையான ஒலிப்பதிவில், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உக்ரைனின் பொருளாதாரம் குறித்து பிரதமர் ஒலெக்ஸி பேசியுள்ளார்.
அதில், ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
Leave a Reply