
உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை தன் வசம் வைத்திருந்த ககேந்திர தபா மகர், தனது 27 வயதில் காலமானார்.
நிமோனியா காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.
நேபாளத்தை சேர்ந்த ககேந்திர தபா மகர் பெற்றோருடன் வசித்து வந்தார். திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, காத்மாண்டுவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போகாராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிமோனியோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ககேந்திர தபா மகருக்கு இதயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காலமான ககேந்திர தபா மகர் 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி பிறந்தார். 2010ஆம் ஆண்டு தனது 18வது வயதில் உலகின் மிகச் சிறிய மனிதராக அறிவிக்கப்பட்டார். உலகின் மிகிச் சிறய மனிதராக அறிவிக்கப்பட்டபோது 67.08 செ.மீட்டர் உயரமும், 6 கிலோ எடையும் கொண்டவராக இருந்தார்.
இருப்பினும், கடந்த ஆண்டு, 54.6 செ.மீட்டர் உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட பிலிபைன்ஸை சேர்ந்த ஜூன்ரேவிடம் உலகின் மிகச் சிறிய மனிதர் என்ற பட்டத்தை மகர் இழந்தார்.
Leave a Reply