
இவ்வாண்டின் பிற்பகுதியில் கிளாஸ்கோவில் ஐ.நா. காலநிலை மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஸ்கொற்லாந்து அரசாங்கம் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை, 2045ஆம் ஆண்டளவில் கார்பன் வெளியேற்றத்தை நிகர பூச்சியமாகக் குறைக்க ஸ்கொற்லாந்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. இது இங்கிலாந்து முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு காலத்தை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக இலக்கை அடைய முடியும்.
எனினும் ஸ்கொற்லாந்து அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலக்கு மிகவும் கடினமானவை என கூறப்படுகிறது. இருப்பினும், ஏனைய நாடுகள் அதவாவது, சுவீடன், நியூசிலாந்து போன்றவை ஒரே குறிக்கோளுடன் காலநிலை மாற்றத்தை சமாளிக்க சட்டத்தை இயற்றியுள்ளன.
இது ஸ்கொட்லாந்து தீர்மானம் எடுப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுவீடன் அவ்வாறு செய்தது. எனினும் ஸ்கொற்லாந்தின் இலக்குகளில் விமான மற்றும் கப்பல் போக்குவரத்திலிருந்து உமிழப்படும் வாயு வெளியேற்றங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.

கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வு – கார்பன் ரை ஒக்சைட் போன்றவை 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை வித பாதியளவில் குறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் குறைந்த செலவில் இன்னும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மேலும், போக்குவரத்துக்கு தேவைப்படும் பகுதிகள், விவசாயம் மற்றும் நிலப் பயன்பாடு, வணிக மற்றும் கனரக தொழில் போன்றவற்றினால் கணிசமான வெப்பநிலை உருவாகிறது.
எனவே, எதிர்காலத்தில் சிந்தித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக ஸ்கொற்லாந்தின் பொருளாதாரம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுப்பதும் சிறந்தது என வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அடுத்த 18 மாதங்களில், ஸ்கொட்லாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, பொருளாதாரத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் நியாயமான மாற்றத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பவற்றை ஆராயும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Leave a Reply