
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த 25 விபச்சார விடுதிகளில் பெண்கள் உட்பட 57 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply