
ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் சீ.ஏ.சந்திரபிரேம நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திரபிரேம அரசியல் விமர்சகர் என்பதுடன் எழுத்தாளருமாவார்.
அதேவேளை ரஷ்யாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியரான எம்.டி.லமாவங்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனிக்கான இலங்கையின் தூதுவராக கணனி தொழிநுட்பம் சம்பந்தமான சர்வதேச நிறுவனத்தின் இலங்கையின் பிரதிநிதியாக கடமையாற்றிய மனோரி உணம்புவ நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சாந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்தியா உயரஸ்தானிகராக இந்திய பிரதமர் அலுவலகத்தின் கூட்டு செயலாளராக கடமையாற்றிய சிரேஷ்ட ராஜதந்திர அதிகாரியான கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply