
கிளிநொச்சி, முல்லைத்தீவில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களிற்கான மீன்பிடி வள்ளங்கள் மற்றும் மீன்குஞ்சு பராமரிப்பு வலைகள் இன்று (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்ததுடன், அலுவலகத்தில் காணப்படும் குறைபாடுகள், நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து கிளிநொச்சி இரணைமடு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு, உடையார்கட்டு ஆகிய பகுதிகளில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களிற்கு வள்ளங்களும், நன்னீர் மீன்குஞ்சுகளை பராமரிக்கும் வலைகளும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Leave a Reply