
நோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புல் என அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு, அம்பேபுஸ்ஸ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அம்பேபுஸ்ஸ பகுதியில் குறித்த நுளம்பை கண்டறிவதற்காக விசேட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள விசேட நுளம்புகளின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply