
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுதியான பெருமளவு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்தே நீர்கொழும்பினைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ், மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சியின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவற்றினை கைபற்றியுள்ளனர்.
இதன்போது பயணப்பையில் இருந்து 19 வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்குகள் வியாபார நோக்கில் நீர்கொழும்பில் இருந்து மட்டக்களப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் நாளை கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Leave a Reply