
காவிரி டெல்டா பகுதியில், மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு உரிமம் வழங்கியதை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும்’ என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், “தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு அதற்கான ஏல அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
ஏற்கனவே நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.
ஹைட்ரோ கார்பன் உரிமம் வழங்கப்பட உள்ள பரப்பளவில் 20 சதவீதத்திற்கும் கூடுதலான பரப்பு காவிரி டெல்டாவில் தான் அமைந்திருக்கிறது. காவிரி டெல்டாவை கார்பன் மண்டலமாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.
தமிழக மக்கள் எதிர்க்கும் இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply