இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்வதாக தகவல்!

இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து  34 ஆயிரம் பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன.

இதில், 2018 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து, 34 ஆயிரத்து, 516 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்றும் இது 2017 ஆம்  ஆண்டைவிட 3.6 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைகள் அதிகமான மாநிலமாக மராட்டிய மாநிலம் பதிவாகியுள்ளதுடன்,  இங்கு 17,972 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் மேற்குவங்காளம் 3 ஆம் இடத்திலும் மத்தியபிரதேசம் 4 ஆம் இடத்திலும் கர்நாடகம் 5 ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த 5 மாநிலங்களில் தான் ஒட்டு மொத்த இந்தியாவின் அரைவாசிக்கும் அதிகமான தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வேலை இல்லாதவர்கள் 12,936 பேரும், சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் தற்கொலை செய்துள்ளனர். விவசாய துறையில் 10,349 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 42,391 பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர் என்றும் இவர்களின் குடும்பத் தலைவிகள். அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் உள்ளடங்குவதாகவும் அந்த விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *