
பிரித்தானிய இளவரசர் ஹரி எடுத்த முடிவு தைரியமான முடிவு என்று பிரபல தமிழ் நடிகையான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் இம்மாத ஆரம்பத்தில், பிரித்தானியா மற்றும் வட அமெரிக்காவிற்கு இடையில் தங்கள் நேரத்தை பிரிக்க விரும்புவதாகவும், அதே போல் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்புவதாகவும் அறிவித்தனர்.
இவர்களின் இந்த அறிவிப்பை மகா ராணி இரண்டாம் எலிசபெத் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் நேற்று பங்கிங்காம் அரண்மனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் ஹாரி தம்பதி இனி அரசக் கடமைகளுக்கான பொது நிதியை பெறமாட்டார்கள் என்றும் அவர்களின் செயல்கள் இங்கிலாந்து ராணியை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் இந்தாண்டு வசந்த காலத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செய்தியாளரான பியர்ஸ் மோர்கன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஹாரியை அவருடைய குடும்பம், இராணுவம் மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு இவ்வளவு நீண்ட காலம் தேவைப்பட்டதோ என்று மேகனை மறைமுகமாக தாக்கும் விதமாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நடிகையான குஷ்பு, பியர்ஸ் மோர்கனுக்கு பதிலளிக்கும் விதமாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஹாரியின் முடிவு தைரியமான முடிவு என்று நான் நினைக்கிறேன்.
உங்களிடம் இருக்கும் அனைத்து வசிதிகள் மற்றும் சிலவற்றை விட்டுவிட்டு, இதற்கு முன் அனுபவிக்காத வாழ்க்கையை வாழ நிறைய தைரியம் தேவை.
உங்களைப் போன்ற சில ஆண்கள் ஏன் எல்லாவற்றிற்கும் ஒரு பெண்ணைக் குறை கூற விரும்புகிறார்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply