
கிளிநொச்சி, மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவிகளான தர்சினி மற்றும் கிருசாந்தி ஆகியோரின் நடன அரங்கேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கிளிநொச்சி கூட்டுறவு சபையின் கலாசார மண்டபத்தின் இராசநாயகம் அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் இதில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில், விசேட வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து மாணவிகளுக்கான ஆசிகள் வழங்கப்பட்டு மாணவிகளின் நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

Leave a Reply