
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு மீண்டும் கூடவுள்ளது. அதற்கமைய குறித்த குழு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழுவின் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கின்ற சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எஸ்.பி.திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேயமுனி சொய்சா தொடர்பாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு ஒன்றுகூடி ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply