
லிபரல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதியளவில் நியமிக்கப்படுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஜோ ஸ்வின்சன், கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வியடைந்தமையினால் அப்பதவியை இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் ஒரு கால அட்டவணையை வகுத்துள்ளது, அந்தவகையில் எதிர்வரும் மே 11 முதல் மே 28 ஆம் திகதிவரை வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கால எல்லை வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவருக்கான வாக்குப்பதிவு ஜூன் 18 ஆம் திகதி தொடங்கி ஜூலை 15 ஆம் திகதி முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியில் உள்ள 100,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் இந்த தேர்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என கட்சி அறிவித்துள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் சர் எட் டேவி மற்றும் கட்சியின் தவிசாளர் மார்க் பேக் ஆகியோர் தேர்தல் செயல்முறை முடியும் வரை லிபரல் ஜனநாயகக் கட்சியின் பதில் தலைவர்களாக தொடருவார்கள் என்று கட்சி தெரிவித்துள்ளது.
Leave a Reply