
தி.மு.க., காங்கிரஸ் உறவு உடைந்த கண்ணாடி போன்றது என்றும், அதனை ஒட்ட வைத்தாலும் மறுபடியும் உடைந்துதான் போகும் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. தொடர்பான மாநில அமைச்சர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
இதனையடுத்து சென்னை திரும்பிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் 2017-2018ம் ஆண்டில், தமிழகத்திற்கு வரவேண்டிய வருவாய் பங்கீட்டு தொகை 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான சட்டத்தை வளைத்து ஒடித்தது தி.மு.க.தான் எனவும் அ.தி.மு.க. சட்டத்திற்குட்பட்டு செயற்படுவதாகவும் கூறினார். கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸை தி.மு.க. மோசமாக நடத்தி வருவதாகவும் ஜெயக்குமார் இதன்போது விமர்சித்தார்.
Leave a Reply