
நல்ல கதை கொண்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல வரவேற்பு பெற்று நீண்டநாட்கள் ஓடுகின்றன. சினிமாவை தாண்டி பல ரசிகர்களையும் அப்படங்கள் பேச வைத்து விடுகின்றன.
தற்போது பிரபல கிரிக்கெட் வீர ஜாண்டி ரோட்ஸ் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அண்மையில் அவர் கல்லி பாய் என்ற படத்தை பார்த்துவிட்டு தான் இப்படி ஒரு பதிவிட்டுள்ளார்.
இதில் அவர் கல்லி பாய் படத்தி நடித்த சித்தார்த் சதுர்வேதியை சந்தித்தது முதல் கல்லி பாய் பாடல்களை கேட்டுகொண்டிருக்கிறேன்.
விமானத்தில் முழுபடத்தையும் பார்த்து ரசித்தேன். சப்டைட்டில்களுக்கு நன்றி. நான் அழுதேன், சிரித்தே, சிலிர்த்தே என கூறியுள்ளார்.
ஸோயா அக்தர் இயக்கத்தில் வந்த கல்லி பாய் படம் கடந்த 2019 ல் ஃபிப்ரவரி 14 ல் வெளியாகி ரூ 230 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply