
உரிய சுகாதார விதிமுறைகளை பேண தவறிய யூஸ் உற்பத்தியாளருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டது.
ஊர்காவற்றுறை நகர் பகுதியில் அனுமதியற்ற விதத்தில் உரிய வெப்ப நிலையின்றி மூடிய வடி ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 யூஸ் பைக்கற்றுக்களை ஊர்காவற்றுறை பொது சுகாதார பரிசோதகர் இ.ஜெயகதாசன் மற்றும் காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ம. ஜெயதீப் ஆகியோர் இணைந்து கைப்பற்றியிருந்தனர்.
அவற்றை நீதிமன்றில் ஒப்படைத்த பொது சுகாதார பரிசோதகர்கள், உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , உரிமையாளர் மன்றில் சமூகம் அளிக்காத காரணத்தால் மன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
மன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட உரிமையாளர் கடந்த 16 ஆம் திகதி மன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.


Leave a Reply