
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் நேற்று (சனிக்கிழமை) சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய போராட்டங்களில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும், அத்தோடு 377 பேர் குறைந்தபட்சம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அல்லது சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர் என செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புக்கள் கூறியுள்ளன.
அந்தவகையில் பெய்ரூட்டில் காயமடைந்த 80 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மேலும் 140 பேர் அந்த இடத்தில் சிகிச்சை பெற்றனர் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பல மணிநேரம் இடம்பெற்ற மோதல்களுக்குப் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அழுத்தத்தை கொடுத்து ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply