இ.போ.ச பேருந்து சாரதியின் கடமை உணர்வு..! நடத்துனர், பயணிகள் நடு வீதியில்..

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இ.போ.ச பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பயண பையை தவறவிட்ட நிலையில் அதனை தேடுவதற்காக இறங்கிய நடத்துனர் மற்றும் பயணிகள் சிலரை வீதியில் விட்டு பேருந்து சென்றுள்ளது.

(இல  NB 3645 ) இலக்க பேருந்தில் இன்று இரவு யாழ்.கொடிகாமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நடத்துனரும் பல  பயணிகளும் பேருந்திலிருந்து இறங்கி பைகளை தேடிய போது அவர்களை கவனிக்காது பேருந்தின் சாரதி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்,

பின்பு நீண்ட நேரத்திற்கு பின்பே பேருந்து திரும்பி வந்து இவர்களை ஏற்றி சென்றுள்ளது. இவ்வாறான அசமந்தமான சாரதிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *