என் மகள் அரச குடும்பத்தையே இழிவுபடுத்திவிட்டாள்: மேகன் தந்தை குற்றசாட்டு

அரச கடமைகளில் இருந்து விலகி செல்வதாக அறிவித்ததன் மூலம் மேகன் அரச குடும்பத்தையே இழிவுபடுத்திவிட்டதாக அவருடைய தந்தை தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹரி மற்றும் மேகன் அரச கடமைகளில் இருந்து பின் வாங்குவதாகவும், தங்களது நேரத்தை கனடா மற்றும் வடஅமெரிக்காவில் அதிகம் செலவழிக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பினை வெளியிட்டனர்.

இது அரண்மனை வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, அவர்களுடைய விருப்பத்தை ஏற்றுக்கொண்டதாக நேற்று ராணி அறிக்கை வெளியிட்டார். மேலும், அவர்கள் இனிமேல் அரச தலைப்புகளை பயன்படுத்த மாட்டார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மேகனின் பிரிந்த தந்தை தாமஸ், மேகன் “ஒவ்வொரு பெண்ணின் கனவையும்” தூக்கி எறிந்துவிட்டாள்.

“இது ஏமாற்றமளிக்கிறது, ஏனென்றால் அவள் உண்மையில் ஒவ்வொரு பெண்ணின் கனவையும் பெற்றாள். ஒவ்வொரு இளம்பெண்ணும் ஒரு இளவரசி ஆக விரும்புகிறார்கள். அவளுக்கு அது கிடைத்தது. இப்போது அவள் அதைத் தூக்கி எறிந்து விட்டாள். ஏனென்றால், அவள் அதை பணத்திற்காக தூக்கி எறிவது போல் தெரிகிறது” என்று அவர் கூறினார்.

மேகன் மே 2018 இல் ஹரியை மணந்தபோது அவர்கள் “ராயல்களின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் ராயல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும்” ஒரு கடமையை எடுத்துக் கொண்டனர்.

இப்போது பிரிந்து செல்வதன் மூலம், அரச குடும்ப மரியாதையை அவர்கள் அழிக்கிறார்கள். அதை மலிவுபடுத்திவிட்டார்கள். அவர்கள் அதை இழிவுபடுத்திவிட்டனர் … இது கேலிக்குரிய ஒன்று, அவர்கள் இதைச் செய்யக்கூடாது.” என பேசியுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *