
சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவும் அடையாளம் காணப்படாத வைரஸ் நோயின் காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் உஹான் மாநிலத்தில் பரவியுள்ளது.
இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து உலக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கவனம் செலுத்துமாறும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இது தொடர்பாக கூடுதல் கவனத்துடன் செயற்படுவதாகவும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தமது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply